பாளை சிறையில் சிக்கிய செல் போன், சிம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த சில வாரங்களாக நடந்த அதிரடிப்படையினர் சோதனையின்போது செல்போன்கள், சிம்கார்டுகள், பேட்டரிகள் சார்ஜர்கள், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் சிக்கின. தொடர்ந்து ரெய்டு நடந்து வருகிறது.
நேற்று இரவு ஜெயிலர் அமிர்தலால் தலைமையில் கமாண்டோ படையினர் உள் சிறையில் மூன்றாம் பிளாக்கில் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு ஆயுள் தண்டனை கைதியின் அறையிலிருந்து செல்போன், சிம்கார்டு, பேட்டரி மற்றும் சார்ஜர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இவை இன்று சிறைத்துறை டிஜிபி ஷ்யாம்சுந்தரிடம் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து 5 சிறை கைதிகளிடம் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications