மேட்டூர் அணை 100 அடி-இந்த ஆண்டில் முதல் முறை
மேட்டூர்: இந்த ஆண்டில் முதல் முறையாக மேட்டூர் அணை இன்று காலை 100 அடியைத் தொட்டது.
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு அதிக அளவிலான காவிரி நீரை கர்நாடக மாநிலம் திறந்து விட்டுள்ளது.
கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி அணைகள் ஏற்கனவே நிரம்பியுள்ள நிலையில் தமிழகத்திற்கு தற்போது பெருமளவிலான உபரி நீரும், அணைகள் திறந்து விடப்பட்டுள்ளதால் அந்த நீரும் வந்து சேர்ந்தன.
நேற்று மாலையில் வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி, இன்று காலையில் 50 ஆயிரம் கன அடியாக வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை இன்று காலை 100 அடியைத் தொட்டது.
தற்போது 51 ஆயிரம் கன அடி நீர் வருவதால் அணையின் நீர்மட்டம் 100.13 அடியாக இருக்கிறது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகம் இருப்பதால் அணையின் நீர்மட்டம் வெகு விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும் வாய்ப்பு பெருகியுள்ளது.
இந்த ஆண்டில் மேட்டூர் அணை 100 அடியைத் தொடுவது இதுவே முதல் முறையாகும்.
இதையடுத்து அணையிலிருந்து பாசனத்திற்காக 20 ஆயிரத்து 811 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் கடைமடை விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications