பாக். பாதுகாப்பு படை-தாலிபான் மோதல்:79 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வசிர்ஸ்தான் பகுதியில் நடந்த மோதலில் 45 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் 34 தாலிபான் என மொத்தம் 79 பேர் பலியாகியிருப்பது தெரியவந்துள்ளது.
தெற்கு வசிர்ஸ்தானில் உள்ள ஸ்பினா டைகா மற்றும் மாகீன் பகுதிகளில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளில் அதிரடி தாக்குதல் நடத்தினர்.
இதில் 26 தாலிபான்கள் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
வடக்கு வசிர்ஸ்தான் பகுதியில் ராஷ்மக் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் சுமார் 8 தாலிபான்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையல் இதை தொடர்ந்து தாலிபான் தீவிரவாதிகள் சுமார் 600 பேர் மேல் கோபர் மற்றும் கீழ் கோபர் சோதனை சாவடிகளில் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் சுமார் 45 பாதுகாப்பு படைவீரர்கள் கொல்லப்பட்டதாக தாலிபான் செய்தி தொடர்பாளர் அசம் டாரிக் தெரிவி்த்துள்ளார்.
இதையடுத்து மொத்தம் 79 பேர் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications