வரி:எஸ்பிஐ முதலிடம்-ரூ.1,832 கோடி செலுத்தியது
டெல்லி: இரண்டாவது காலாண்டில் அதிக வரி செலுத்திய நிறுவனம் என்ற பெருமையை ஸ்டேட் பாங்க் ஆப் பெற்றுள்ளது. அந்நிறுவனம் ரூ. 1, 832 கோடி வரி செலுத்தியுள்ளது.
இரண்டாவது காலாண்டுக்கான வரி முன்தொகை செலுத்துவது கடந்த 15ம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது வரி முன்தொகை சுமார் 13.10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ரூ. 49 ஆயிரத்து 502 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த காலாண்டில் 6 சதவீதம் குறைந்திருந்த இது தற்போது நன்றாக உயர்ந்திருப்பது பொருளாதாரம் மீட்சியடைந்து வருவதையே காட்டுகிறது.
ஆனால் இந்தியாவின் டாப் 50 நிறுவனங்களில் 12 கடந்த காலாண்டை விட தற்போது குறைவாகவே வரி செலுத்தியுள்ளது.
இது குறித்து நிதி அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
வறட்சியால் இது லேசாக பாதிக்கவும்படலாம். ஆனால், அடுத்தடுத்து தொடர்ந்து விழாக்கள் வருவதால் மூன்றாவது காலாண்டில் இது மேலும் அதிகரிக்கும்.
கார்பரேட் வரிகள் இரண்டாவது காலாண்டில் ரூ. 44 ஆயிரத்து 010 கோடியாக அதிகரித்துள்ளது. அதவாது சுமார் 14.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 20 ஆயிரத்து 728 கோடியாக ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் முதல் காலாண்டில் 44 சதவீதம் குறைந்திருந்த தனிநபர் வருமான வரி தற்போது 1.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது இரண்டாவது காலாண்டில் ரூ. 5 ஆயிரத்து 492 கோடியாக இருக்கிறது.
அதிக வரி செலுத்திய நிறுவனங்கள் வரிசையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரூ. 1,832 கோடியுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஒஎன்ஜிசி 2வது, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் 3வது இடத்தை பிடித்துள்ளன.
என்றாலும் ஒஎன்ஜிசி, செய்ல், ஐசிஐசிஐ வங்கி, சிட்டிபாங்க், அம்புஜா சிமென்ட்ஸ் போன்றவை கடந்த காலாண்டை விட குறைவாக வரி முன்தொகை செலுத்தியுள்ளன.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சிக்கு கடந்த ஜூன் மாதத்தில் இந்திய தொழிற்சாலைகள் 8.2 சதவீதம் மற்றும் ஜூலையில் 6.8 சதவீதம் வளர்ச்சி கண்டதே காரணம் என கூறப்படுகிறது.
அதேபோல் ஆட்டோமொபைல் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது. மாருதி கடந்த காலாண்டை விட 97.76 சதவீதம் அதிக வரி கட்டியுள்ளது. பஜாஜ் ஆட்டோ 90 சதவீதம் அதிகமாக வரி செலுத்தியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் இரண்டு மடங்கிற்கு மேல் வரி முன்தொகை செலுத்தியுள்ளன. இன்போசிஸ் 100 சதவீதம் அதிகமாக ரூ. 300 கோடி வரி செலுத்தியுள்ளது. டிசிஎஸ் நிறுவனம் 171.60 சதவீதம் அதிகமாக ரூ. 220 கோடி கட்டியுள்ளது.
ஏசிசி சிமென்ட்ஸ் நிறுவனம் 257 மடங்கு அதிகமாக ரூ. 150 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கி 35.71 சதவீதம் அதிகமாக ரூ. 475 கோடியும், பாங்க் ஆப் இந்தியா 199 சதவீத உயர்வுடன் ரூ. 269 கோடியும் செலுத்தியுள்ளன.
ஆனால், செய்ல் நிறுவனம் 13.48 சதவீதம் குறைவாக, ரூ. 918 கோடி வரி செலுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications