தமிழக மீனவர்களைத் தாக்கி மீண்டும் இலங்கை கடற்படை அட்டகாசம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையின் அட்டகாசம் சற்றும் அடங்கவில்லை. மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்களின் படகுகளைத் தாக்கி சேதப்படுத்திய இலங்கை கடற்படை காடையர்கள் மீன்கள் உள்ளிட்டவற்றைப் பறித்துச் சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்களை தாக்கிக் காயப்படுத்துவதையும், கடத்திச் செல்வதையும், பொழுதுபோக்காக மாற்றி விட்டனர் இலங்கை கடற்படையினர்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்கப் போன மண்டபம், பாம்பன் பகுதி மீனவர்களைத் தாக்கியுள்ளனர் இலங்கை கடற்படை காடையர்கள்.

கிட்டத்தட்ட 120க்கும் அதிகமான படகுகளில் மீன் பிடிக்கப் போன மீனவர்களை நடுக் கடலில் சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் தங்களது சிறிய கப்பல் மூலம், மீனவர்களின் படகுகள் மீது மோதி அவற்றை சேதப்படுத்தினர்.

பின்னர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் உள்ளிட்ட மீன்களைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

அதேபோல பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டணத்தைச் சேர்ந்த மீனவர்களையும் தாக்கியுள்ளனர் இலங்கை கடற்படையினர்.

அவர்களின் படகுகளை தாக்கி சேதப்படுத்தியதோடு, பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறித்துச் சென்றுள்ளனர்.

விரைவில் மீனவர்கள் விடுதலை - இலங்கை

இதற்கிடையே, சமீபத்தில் பிடித்துச் சென்ற 21 மீனவர்களையும் விரைவில் விடுவிப்பதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் பெலிக் பெரேரா கூறியுள்ளார்.

இதுகுறித்து கொழும்பில் அவர் கூறுகையில், இந்தியாவும், இலங்கையும் சகோதரர்கள் போல. இந்தியாவை நாங்கள் என்றுமே மதித்துதான் வந்துள்ளோம். இதுபோல மீனவர்கள் எல்லை தாண்டி வந்து விட்டால் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க முயற்சிக்கிறோம்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனுராதபுரத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது. அதுதான் முக்கியம். மீனவர்கள் ஏழைகள். எனவே அவர்களை கோர்ட்டுக்குக் கொண்டு செல்ல நாங்கள் விரும்பவில்லை. சில நேரங்களில் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவர்கள் எல்லை தாண்டி, விதிகளைத் தாண்டி வந்து விடுகிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் மீது நாங்கள் கடுமையாக நடவடிக்கை எடுப்பதில்லை. எங்களது மீனவர்கள் இதுபோல செய்யும்போது இந்தியா அவர்களை விடுவித்து விடுகிறது. அதேபோல நாங்களும் இந்திய மீனவர்களை விடுவித்து விடுவோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+