7 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாய் ஏவியது பிஎஸ்எல்வி

காலை 11.51 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
ஏவப்பட்ட 20 நிமிடங்களில் இந்த 7 செயற்கைக் கோள்களையும் பிஎஸ்எல்வி அடுத்தடுத்து விண்வெளியில் செலுத்தியது.
கடலில் மீன்வளத்தைக் கண்டறிவது, வானிலை முன்னறிவிப்பு ஆகியவற்று்கு ஓசன்சாட் செயற்கைக் கோள் உதவும்.
970 கிலோ எடையுடன் கூடிய ஓசன்சாட் செயற்கைக் கோளுடன், 6 சிறிய செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்தியது பிஎஸ்எல்வி.
இதில் 4 ஜெர்மனியைச் சேர்ந்தவை. மற்ற இரண்டில் ஒன்று சுவிட்சர்லாந்து மற்றும் இன்னொன்று துருக்கியைச் சேர்ந்ததாகும்.
பி.எஸ்.எல்.வி மூலம் இதுவரை 15 முறை செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இன்று செலுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி- சி14 ரக ராக்கெட்டாகும்.
விண்ணில் பாய்ந்த 1,200 வினாடிகளுக்குள், அதாவது 20 நிமிடங்களில் இந்த 7 செயற்கைக் கோள்களையும் பிஎஸ்எல்வி அடுத்தடுத்து விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தியது.
துணை குடியரசுத் தலைவர் பார்த்தார்...
பி.எஸ்.எல்.ஏ. ஏவப்படுவதை துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி நேரில் பார்வையிட்டார்.
ஏவப்பட்ட ஓசன்சாட் செயற்கைக் கோளிலிருந்து சிக்னல்களை மொரீஷியசில் உள்ள இஸ்ரோ மையம் பெற ஆரம்பித்துவிட்டது. அதே போல ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகிய நாடுகள் தங்கள் நானோ சாட்டிலைட்டுகளின் சிக்னல்களை பெற ஆரம்பித்துவிட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications