கிழக்கு கடற்கரைச் சாலையில் வாலிபர் படுகொலை
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், முட்டுக்காடு அருகே வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முட்டுக்காட்டுக்கு அருகே வஸ்தகரா தோட்ட பகுதி இருக்கிறது. அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவர் பிணமாக கிடப்பதை அந்த வழியாக சென்றவர் ஒருவர் பார்த்தார்.
அந்த பிணத்தின் உடலில் கழுத்து, வயிறு, முதுகு என பல இடங்களில் சராமரியாக கத்தியால் குத்தி கிழிக்கப்பட்டிருந்தது. இறந்த அந்த இளைஞருக்கு சுமார் 25 முதல் 30 வயதுக்குள் இருக்கலாம் என தெரிகிறது.
இதையடுத்து அந்த நபர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் உடனடியாக விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவ இடத்தில் கொலை செய்யப்பட்டதற்கான தடயம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அவரை வேறு எங்காவது வைத்து கொலை செய்து இங்கு போட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவி்த்தனர்.
இறந்த அந்த வாலிபர் யார்? அவரை எதற்காக கொன்றனர்? போன்ற கேள்விகளுக்கு போலீசார் விடை தேடி வருகின்றனர்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications