மின் ஊழியர்களுக்கு 20% போனஸ்-ஊதிய உயர்வு
சென்னை: தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவித்துள்ளார்.
தீபாவளி போனஸ் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆற்காடு வீராசாமி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சங்கத்தினர் 25 சதவீத போனஸ் கோரினர்.
ஆனால், மின்துறையின் கஷ்டமான நிதி நிலையை விளக்கிய ஆற்காடு வீராசாமி 20 சதவீத போனஸ் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இதை சங்கத்தின் ஏற்றுக் கொண்டனர்.
இதன்மூலம் மின்வாரியத்தில் பணியாற்றும் 64,722 ஊழியர்களுக்கு ரூ. 58.50 கோடி போனசாக வழங்கப்படும்.
மேலும் தற்காலிக பணியாளர்கள் 5,516 பேர் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும், 2011ம் ஆண்டுக்குள் அனைவரும் நிரந்தரம் செய்யப்பட்டு விடுவார்கள் என்றும் வீராசாமி உறுதியளித்தார்.
இதைத் தவிர தீபாவளி பரிசாக மின்துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்றும் இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications