ராமதாஸ்-பொன்முடி கொடும்பாவிகள் எரிப்பு!
விழுப்புரம்: வன்னியர் சங்கம் நடத்திய இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவர்களின் நினைவிடத்தில் அமைச்சர் பொன்முடி அஞ்சலி செலுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மையை பாமகவினர் எரித்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினர் ராமதாஸின் கொடும்பாவியை எரித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் இடஒதுக்கீடு கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் பலர் இறந்தனர். அவர்களுக்கு அங்கு வன்னியர் சங்கம் சார்பில் நினைவுத் தூண் மைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வன்னியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் இங்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக எம்எல்ஏக்கள் இருவர் உட்பட 103 பேர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் பாமக மாவட்ட செயலாளர் அன்பு தலைமையில், நிர்வாகிகள் பலர் கோலியனூரில் உள்ள நினைவிடத்திற்கு நேற்று காலை அஞ்சலி செலுத்தினர். அப்போது சிலர் அமைச்சர் பொன்முடியின் உருவ பொம்மை எரித்தனர்.
இதனை அறிந்த கோலியனூர் திமுகவினர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உருவ பொம்மையை பதிலுக்கு எரித்தனர்.
உருவபொம்மை எரிப்பதில் ஈடுபட்ட பாமக, திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications