பள்ளி வேன் கவிழ்ந்து 5 குழந்தைகள் படுகாயம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பள்ளி வேன் ஒன்று கவிழ்ந்ததில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் படுகாயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் உள்ள மாடர்ன் மழலையர் மெட்ரிக்குலேசன் பள்ளி வேன் ஓன்று நேற்று மாலை குழந்தைகளை ஏற்றி கொண்டு சென்றது.
அந்த வேன் போகலூர் நூலகம் அருகே சென்றபோது நிலை தடுமாறி கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த பவித்ரா (4), சின்னநாகாச்சி ஹேமாஸ்ரீ (4), ஜமுனாதேவி (7), போகலூர் மகாலட்சுமி (8), செவ்வூர் பிரவீன் (9) மற்றும் போகலூரை சேர்ந்த பள்ளி ஆசிரியை பவுசியா(24) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை அறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியடைந்து மருத்துவமனையில் குவிந்தனர்.
இது குறித்து சத்திரக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications