தமிழகத்தில் இன்று மழை பெய்யும்-வானிலை மையம்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் காலையிலிருந்து நல்ல வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது.
கர்நாடகத்தின் உள்பகுதி மற்றும் ஆந்திரத்தின் ராயலசீமா பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இதன் காரணமாக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் தமிழகத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக நேற்று வேலூர், மேலஆத்தூரில் 90 மில்லி மீட்டர் மழை பெய்தது.
சென்னையைப் பொறுத்தவரை, குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, தாமரைப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 20 மில்லி மீட்டரும், சோழவரத்தில் 30 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே நல்ல வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது. கோடை கால வெயில் போல கொளுத்தி வருவதால் மக்கள் புழுக்கத்தில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
அதேசமயம், மாலை நேரங்களில் சில இடங்களில் மழை காணப்படுகிறது. இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுபோலவே உள்ளது. அதேசமயம், நல்ல வெயிலும் அடித்துக் கொண்டிருக்கிரது.
இரவில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே!












Click it and Unblock the Notifications