கொசுவர்த்தி சுருள் பாக்கெட்டில் ஆபாச சிடியை வைத்து விற்ற பலசரக்கு கடை
கடையம்: நெல்லை மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியில் கொசுவர்த்தி சுருள் டப்பாவுக்குள் ஆபாச சிடிக்களை வைத்து விற்ற மளிகைக் கடைக்காரரை போலீஸார் கைது செய்தனர்.
பொட்டல்புதூர் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட மளிகை கடையில் ஆபாச சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக கடையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடையம் இன்ஸ்பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், தனிப்பிரிவு தலைமை காவலர் ராமமூர்த்தி ஆகியோர் பொட்டல்புதூர் பகுதியில் உள்ள மளிகை கடைகளை மறைந்திருந்து நோட்டமிட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு கடையில் தினமும் சிலர் கொசுவர்த்தி சுருள் மட்டுமே வாங்கி சென்றனர். இதில் சந்தேகமடைந்த போலீசார் கடையை அதிரடியாக சோதனை போட்டனர்.
அங்கு கொசுவர்த்தி சுருள் பக்கெட்டுகளில் புதுப்பட சிடிக்கள் மற்றும் ஆபாச சிடிக்கள் என மொத்தம் 130 சிடிக்கள் இரு்ந்தன. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து கடையின் உரிமையாளர் திருமலையப்பபுரத்தை சேர்ந்த துர்க்கை முத்து என்ற குமார் என்பவரை கைது செய்தனர். மேலும் அவருக்கு உதவியாக இருந்த வீராசமுத்திரத்தை சேர்ந்த ராஜாங்கம், என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications