நிலவில் நீர்..இஸ்ரோ உதவியுடன் கண்டறிந்தோம்-நாசா
வாஷிங்டன்: நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பது உண்மைதான். இதை இஸ்ரோவின் சந்திரயான்-1 உதவியுடன் நாசா கண்டுபிடித்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.
இதை நாசா விஞ்ஞானிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திரயான்-1 விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த நாசாவின் எம்3 எனப்படும் மூன் மேப்பர் சாதனம் கண்டுபிடித்துள்ளது. இது இஸ்ரோவை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் இதுகுறித்து நாசா விளக்கம் அளித்துள்ளது. வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாசாவின் கிரக அறிவியல் பிரிவின் இயக்குநர் ஜிம் கிரீன் கூறுகையில், இந்த கண்டுபிடிப்பை சாத்தியமாக்கியதற்காக இஸ்ரோவுக்கு நன்றி கூறிக் கொள்கிறோம். இதுவரை நிலவை வறண்ட ஒரு பகுதியாகவே நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது அங்கு தண்ணீர் இருப்பது தெரிய வந்துள்ளது.
இஸ்ரோவின் உறுதுணையுடன், நாசாவின் எம்3, நிலவின் தளத்தில் நீர் மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. இது முக்கியமான கண்டுபிடிப்பு என்பதில் சந்தேகம் இல்லை.
எதிர்பார்த்த அளவை விட அதிக அளவிலா நீரை உருவாக்கக் கூடிய மூலக்கூறுகள் அங்கு இருப்பது வியப்பளிக்கிறது. இந்த எதிர்பாராத கண்டுபிடிப்பு நாசா மற்றும் இஸ்ரோ இடையிலான சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் சாத்தியமாகியுள்ளது என்றார்.
இதற்கிடையே, ஏரி அளவுக்கோ, கடல் அளவுக்கோ அல்லது குளம் அளவுக்கோ நிலவில் தண்ணீர் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1000 நீர் மூலக்கூறுகள் நிலவில் இருக்கலாம் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications