சென்னைக்கு வரும் அமெரிக்காவின் கார்ல்சன் ஹோட்டல்

96 அறைகளுடன் கூடிய ஹோட்டலாக சென்னை எழும்பூரில் கால் பதிக்கிறது கார்ல்சன். ரூ. 78 கோடி முதலீட்டில் இந்த ஹோட்டல் கட்டப்படுகிறது. இந்த ஹோட்டலுக்கு கன்ட்ரி இன் அன்ட் சூட்ஸ் என்ற பெயர் சூட்டப்படுகிறது.
ஏற்கனவே எழும்பூரில் செயல்பட்டு வந்த வைகை ஹோட்டல் இருந்த அதே இடத்தில்தான் கார்ல்சன் ஹோட்டல் எழும்புகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக செயல்பட்டு வந்த வைகை ஹோட்டல் 58 அறைகளுடன் செயல்பட்டு வந்தது. சமீபத்தில் அது மூடப்பட்டது.
இதுகுறித்து கன்ட்ரி இன் அன்ட் சூட்ஸ் ஹோட்டல் இயக்குநர் ஜெயகாந்த் கூறுகையில், 9.6 கிரவுண்டு நிலப்பரப்பில் 11 மாடிகளுடன் கூடியதாக 96 அறைகளுடன் புதிய கார்ல்சன் ஹோட்டல் அமைகிறது. இவற்றில் தற்போது 48 அறைகள் மட்டுமே செயல்பாட்டுக்கு வருகின்றன.
ஹோட்டலில் இரண்டு ரெஸ்டாரன்ட்டுகள், ஒரு மாநாட்டு அரங்கு ஆகியவை இடம் பெறுகின்றன. நீச்சல் குளம் மற்றும் பார் அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்த ஹோட்டலின் உரிமை மற்றும் நிர்வாகம் வைகை ஹோட்டலின் புரமோட்டரான என்கேகே ஹோட்டல்ஸ் வசம் இருக்கும். மார்க்கெட்டிங் மற்றும் பிரான்ட் மேம்பாடு ஆகியவற்றை கார்ல்சன் பார்த்துக் கொள்ளும்.
சென்னையில் உள்ள ரேடிசன் ஹோட்டல் மற்றும் மக்னூர் ஹாஸ்பிடாலிட்டி இந்தியா ஆகியவற்றில் என்கேகே ஹோட்டல்ஸுக்கு முக்கியப் பங்கு இருந்தது. பின்னர் ரேடிசனை ஜிஆர்டி குரூப் வாங்கி விட்டது.
இவை தவிர கொடைக்கானலில் உள்ள வைகோ இன் ஹோட்டலையும் என்கேகே ஹோட்டல்ஸ் வைத்துள்ளது. தற்போது இது குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
சர்வதேச ஹோட்டல் குழுமமான கார்ல்சன் வசம் ரிஜென்ட், ரேடிசன், பார்க் பிளாசா, பார்க் இன் ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது 10 கன்ட்ரி இன் அன்ட் சூட்ஸ் ஹோட்டல்கள் இதன் வசம் உள்ளன.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications