கேரளாவுக்கு 0.4 டிஎம்சி கூடுதல் நீர் தரும் தமிழகம்
ஊட்டி: பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் கீழ் கேரளாவுக்கு தமிழகம் கூடுதலாக 0.4 டிஎம்சி தண்ணீரை வழங்கவுள்ளது.
ஊட்டியில் இரு மாநில அதிகாரிகள் மட்டத்தில் நடந்த 87வது கூட்டத்தில் இது முடிவெடுக்கப்பட்டது.
இரு மாநில கூட்டு தண்ணீர்ப் பங்கீட்டு குழுக் கூட்டம் ஊட்டியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்...
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் கீழ் கேரளாவின் சித்தூர்புழா நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் 2வது நெல் பருவதத்திற்கு 0.4 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக விடப்படும்.
வருடந்தோறும் தமிழகம் வழங்கும் 7.25 டிஎம்சி தண்ணீருக்குக் கூடுதலாக இது வழங்கப்படும்.
மேலும் நடப்பு நீர் ஆண்டுக்குத் தேவையான நீரையும் தர தமிழகம் ஒப்புக் கொண்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தமிழகம், கேரளாவுக்கு 6.6 டிஎம்சி தண்ணீரை திறந்து விடும்.
இந்தக் கூட்டத்தில் 2007-08ம் ஆண்டில் தமிழகம் திறந்து விடாத பற்றாக்குறைத் தண்ணீர் குறித்த பிரச்சினையை இரு மாநில அரசுகளிடமும் விடுவது என நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நேற்றைய கூட்டத்தி்ல தமிழக அரசின் சார்பி்ல் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் பஞ்சநாதன் தலைமையிலான தமிழக குழுவும், லத்திகா தலைமையிலான கேரள குழுவும் பங்கேற்றன.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications