பாளையங்கோட்டை சிறையில் தலித் கைதிகள் மோதல்- ஒருவர் பலி
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறைச் சாலையில் தலித் கைதி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவ்டடம் கீழப்பாட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (52). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் செல்லத்துரையும் ஒருவர்.
ஆனால் விடுதலையாகி வெளியே வந்த சில நாட்களிலேயே அவர் 1994ல் நடந்த மற்றொரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைக்குள் அடிக்கடி ஜாதிச் சண்டை நடப்பதால் ஒவ்வொரு ஜாதியைச் சேர்ந்தவர்களும் தனித் தனியாக ஜாதி வாரியாக அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல தலித் வகுப்பைச் சேர்ந்தவரான செல்லத்துரை தலித் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த செல்லில் அடைக்கப்பட்டார்.
அந்த செல்லில் 60 கைதிகள் இருந்துள்ளனர். அப்போது செல்லத்துரைக்குப் பிடிக்காத கோஷ்டியைச் சேர்ந்த கைதிகள் சிலர் சேர்ந்து செல்லத்துரையை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்தார் செல்லத்துரை.
இதையடுத்து நேற்று இரவு அவரை மருத்துதவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலையில் செல்லத்துரை மரணமடைந்தார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபு, சிங்காரம் உள்ளிட்ட 3 கைதிகள் மீது போலீஸார் சந்தேகமடைந்து அவர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
செல்லத்துரை கொலையால் கீழப்பாட்டம் கிராமத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கீழப்பாட்டம் கிராமத்தில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications