சென்னை சர்வதேச மாரத்தான்- 60,000 பேர் பங்கேற்பு
சென்னை: சென்னை அரை மாரத்தான் போட்டி நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 60 ஆயிரம் பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியை தமிழக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி துவக்கி வைத்தார். தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பூங்கோதை கலந்து கொண்டார்.
21 கிமீ., 7 கிமீ., மற்றும் ஊனமுற்றவர்களுக்கான வீல்சேர் பிரிவு என மூன்று வகை போட்டிகள் நடந்தது. இதில் கென்யாவை சேர்ந்த ஜான் வாம்பஸ் என்ற வீரர் முதலிடம் பிடித்து ரூ. 5 லட்சம் பரிசு வென்றார்.
முதலிடம் பிடித்த இந்தியரான ராஜஸ்தான் மாநில தீப்சந்த் சாகாரமுக்கும், தமிழகத்தை சேர்ந்த நாகேந்திர ராவுக்கும் தலா ரூ. 1 லட்சம் பரிசு கொடுக்கப்பட்டது.
இது குறித்து போட்டியை நடத்திய குட்வில் கம்யூனிகேசன் என்ற அமைப்பை சேர்ந்த ஜெகத் காஸ்பர் கூறுகையில்,
மாரத்தான் போட்டி வெற்றிகரமாக நடந்தது. முழு திருப்தியளிக்கிறது. இது சென்னையில் நடப்பது இரண்டாவது முறை என்றாலும் சர்வதேச அந்தஸ்து மற்றும் ஊனமுற்றோர் பிரிவுகள் முதல் முறையாக இடம்பெற்றன.
இதன்மூலம் திரட்டப்பட்ட நிதி, சென்னையில் இருக்கும் ஒரு என்ஜிஓ அமைப்புக்கு கொடுக்கப்படும் என்றார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications