திருவாரூர் மத்திய பல்கலை 30ல் திறப்பு - சிபல், கருணாநிதி பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள மத்திய பல்கலைக்கழகம் செப்டம்பர் 30ம் தேதி திறந்து வைக்கப்படுகிறது. மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் இதைத் திறந்து வைக்கிறார்.
முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
இந்தியா முழுவதும் 12 மத்திய பல்கலைக்கழகங்களை மத்திய அரசு அமைக்கிறது. அதில் ஒன்றாக திருவாரூரும் இடம் பெற்றுள்ளது.
இங்கு முதல் கட்டமாக எம்.ஏ தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய முதுநிலைப் பட்டப் படிப்புகள் தொடங்கப்படுகின்றன.
பல்கலைக்கழகத் திறப்பு விழா செப்டம்பர் 30ம் தேதி திருவாரூரில் நடைபெறுகிறது. மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் திறந்து வைக்கிறார். முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள் விழாவில் பங்கேற்கவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் சஞ்சய் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications