ஐ.நா-காலி அரங்கில் பேசிய இலங்கை பிரதமர்
ஐ.நா.: இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே தனது நாட்டின் வீர பராக்கிரமம் குறித்து ஐ.நா. அவையில் பேசியபோது, அதைக் கேட்க அங்கு ஒரு சிலரே இருந்தனராம். பெரும்பாலான உறுப்பினர்கள் வெளியேறி விட்டனராம்.
ஐ.நா. ஆண்டு சபைக் கூட்டத்தில் இலங்கை பிரதமர் விக்கிரமநாயகேவும், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவும் கலந்து கொண்டனர். ஐ.நா. கூட்டத்தில் விக்கிரநாயகே 25ம் தேதி பேசினார்.
அப்போது கிட்டத்தட்ட சபையே காலியாக இருந்ததாம். ஒரு சிலர் மட்டுமே இருந்துள்ளனர். பெரும்பாலான இருக்கைகள் காலியாகக் கிடந்த நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தை இலங்கை படைகள் வெற்றி கொண்ட வீர பராக்கிரமம் குறித்து ரொம்ப நேரம் பேசினாராம் விக்கிரமநாயகே.
விக்கிரமநாயகே விழுந்து விழுந்து பேசிக் கொண்டிருந்ததையும், அதைக் கேட்க ஆளே இல்லாததையும் பார்த்து கோத்தபயா ராஜபக்சேவும், வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகல்லகாமாவும் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தனராம்.
விக்கிரமநாயகே பேசுகையில், எங்களது நம்பிக்கைகளையும், கவலைகளையும் ஐ.நாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார். இலங்கையின் வெற்றிக் கதையை மட்டுமே பேசிய விக்கிரமநாயகே, இலங்கையில் பத்திரிக்கைச் சுதந்திரம் அமுக்கப்பட்டிருப்பது, ஏராளமான படுகொலைகள் நடந்து வருவது குறித்தோ, ஐ.நா. அதிகாரிகளுக்கு விடுக்கப்படும் மிரட்டல்கள், வெளியேற்றம் குறித்தோ மூச்சுக் கூட விடவில்லை.
இந்த நிலையில், இலங்கை வெளியுறவு அமைச்சர் பொகல்லகாமாவை, இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் மிலிபான்ட் மற்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் பெர்னார்ட் கொச்னார் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது இலங்கை வர விரும்புவதாக இங்கிலாந்து, பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர்கள் கூறினார்களாம். ஏற்கனவே இருவரும் சேர்ந்து இலங்கை வரவிருந்தனர். ஆனால் மிலிபான்ட்டுக்கு மட்டும் விசா கொடுத்த இலங்கை அரசு, கொச்னாரை விசா தராமல் கடுப்படித்து விட்டது என்பது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications