பொங்கலூர் திமுக எம்எல்ஏ மீது ஆக்கிரமிப்பு புகார்
திருப்பூர்: திருப்பூர் சங்கிலிப்பள்ளத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட மேம்பாலத்தை ஆக்கிரமித்து பொங்கலூர் திமுக எம்எல்ஏ எஸ்.மணி சுற்றுச்சுவர் கட்டி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் சங்கிலிப்பள்ளத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 1.18 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் வடகிழக்கு பகுதியில் பொங்கலூர் எம்எல்ஏ மணிக்கு சொந்தமான இடம் உள்ளது. தற்போது அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு சுற்றுச் சுவர் கட்டப்படுகிறது.
இந்த சுற்று சுவரானது நெடுஞ்சாலைத்துறை பாலத்தின் கைப்பிடி சுவரை ஒட்டியும், கல் வெட்டு பதித்துள்ள சுவரை ஒட்டியவாறும், ஹாலோ பிளாக் கற்களை கொண்டு கட்டப்படு வருவதாகவும், அவர் மேம்பால பகுதிகளை ஆக்ரமிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து பொங்கலூர் எம்எல்ஏ மணி கூறுகையில்,
பாலம் கட்டும் போது எனது இடத்தை தானமாக கொடுத்துள்ளேன். அதாவது என்னுடைய 10 அடி நிலத்தில் தான் பாலமே கட்டப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் நிலையில் நெடுஞ் சாலைத்துறை இடம் எனக்கு தேவையில்லை என்றார்.
இதையடுத்து தற்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தின் அருகே உள்ள நிலங்களை சர்வே செய்யும் போது எம்எல்ஏவுக்கு சொந்தமான இடத்தையும் சர்வே செய்ய உள்ளோம். இந்த சர்வே விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications