பொறுப்புடன் செயல்படும் விஜயகாந்த்-கோட்டை விடும் ஜெ.

ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை நிரூபிக்கும் வகையில் விஜயகாந்த்தின் செயல்பாடுகள் அழுத்தம் திருத்தமாகவே உள்ளன.
டெல்லியில் நேற்று விஜயகாந்த் தலைமையில் நடந்த தேமுதிக உண்ணாவிரதத்தில் பெருமளவில் கூட்டம் கூடியது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. இதன் மூலம் வட இந்திய மீடியாக்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார் விஜயகாந்த்.
மேலும் உண்ணாவிரதத்தின்போது அவர் முதல்வர் கருணாநிதியை கடுமையாக சாடினார். அவரது போராட்டம், கூடிய கூட்டம், பேசிய பேச்சு எல்லாமே பொறுப்பான எதிர்க்கட்சி அதிமுக அல்ல, தேமுதிகதான் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பதாகவே உள்ளது.
கொடநாடு போய் ரொம்ப காலமாகி விட்ட நிலையில், கிட்டத்தட்ட ஜெயலலிதாவை தமிழக மக்கள் மறக்கக் கூடிய நிலைக்கு வந்து விட்டனர்.
ஈரோட்டில் குப்பை அள்ளவில்லை, குடியாத்தில் தண்ணீர் வரவில்லை.. இதனால் அந்தப் பகுதி மாவட்டச் செயலாளர் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவர் என்று அறிக்கைகள் தான் விட்டுக் கொண்டுள்ளார் ஜெயலலிதா. இந்தப் போராட்டங்களும் பத்திரிக்கை நிருபர்கள், டிவி கேமராக்கள் படம் பிடித்து முடித்ததோடு முடிந்துவிடுகின்றன என்பதே உண்மை.
ஆனால் விஜயகாந்த் தானே களமிறங்கி போராடுவதால் எதிர்க் கட்சி என்ற இடத்தை நோக்கி மிக வேகமாகவே நகர்ந்து வருகிறார்.
நேற்றைய போராட்டத்தின்போது கிட்டத்தட்ட நாற்பது நிமிடம் பேசினார் விஜயகாந்த். மீனவர்கள் பிரச்சனை குறித்து மிகவும் குறைவாகத்தான் பேசினார். பெரும்பாலும் முதல்வர் கருணாநிதியையும், திமுவையும்தான் அவர் தாக்கினார்.
விஜயகாந்த் பேசுகையில், அண்ணா கட்சிதான் எனது குடும்பம் என்றார். ஆனால் கருணாநிதியோ, எனது குடும்பம்தான் கட்சி என்கிறார்.
கடந்த சில மாதங்களில் ஒரே ஒரு முறை மட்டுமே அவர் டெல்லி வந்துள்ளார். அப்போதும் கூட மாநில நலனுக்காக அவர் வரவில்லை. தமிழக மக்களுக்கான திட்டங்கள் குறித்துப் பேச வரவில்லை. ஆனால் தனது பிள்ளைகளுக்கு நல்ல துறையைக் கேட்பதற்காக அவர் வந்தார்.
எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசு நான்தான். தமிழக இளைஞர்களிடம் போய் நீங்கள் யாராக வர விரும்புகிறீர்கள், கருணாநிதி போலவா அல்லது எம்.ஜி.ஆர். போலவா என்று கேட்டால் எம்.ஜி.ஆர். போலத்தான் வர விரும்புவதாக கூறுவார்கள்.
தமிழகத்தில் நாங்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி விட்டோம். ஆனால் மத்திய அரசு அதைக் கண்டு கொள்ளவே இல்லை. இதனால்தான் டெல்லிக்கு வந்து இன்று போராடுகிறோம்.
இங்குள்ள அரசில் (மத்திய அரசு) திமுகவும் ஒரு அங்கம் வகிக்கிறது. இந்தப் பிரச்சனையை (தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது) தனது கூட்டணிக் கட்சி எப்படிக் கையாளுகிறது என்பது காங்கிரஸ் கட்சிக்குத் தெரிய வேண்டும். அதற்காகத்தான் இந்த போராட்டம்.
தமிழகத்திற்கு ராகுல் காந்தி வந்தார். தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்களே என்று அவரிடம் கேட்டால் குஜராத்தில் கூடத்தான் மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். இங்கே உள்ளது போலத்தான் அங்கும் பிரச்சனை உள்ளது என்று பேசுகிறார். ஆனால் குஜராத்தை விட தமிழகத்தில் நிலைமை மிகவும் அபாயகரமானதாக உள்ளது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்றார் விஜயகாந்த்.
இதுவரை கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோரின் முகங்கள் மட்டுமே நன்கு அறியப்பட்டிருந்த வட இந்தியாவில், நேற்றைய போராட்டத்தின் மூலம் விஜயகாந்த்தின் பெயரும் அழுத்தம் திருத்தமாக பதிய வைக்கப்பட்டுள்ளது என்று கூறினால் அது மிகையில்லை.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications