ரூ. 6.5 கோடி ஆப்கன் பிரவுன் சுகர் பறிமுதல்-10 பேர் கைது
கோவை: ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 6.5 கோடி மதிப்பிலான போதை பொருட்களை தமிழக போலீஸார் கோயம்புத்தூர் மற்றும் சேலத்தில் பறிமுதல் செய்தனர். அதை விற்க முயன்ற 10 பேரை கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக போலீஸ் கமிஷனர் சிவனாண்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய நான்கு பேரை போலீஸார் பின் தொடர்ந்தனர். போலீஸாரை பார்த்த அவர்கள் தப்பியோட முயற்சித்தனர். அதில் மூன்று பேர் மாட்டி கொண்டனர். ஒருவன் தப்பிவிட்டான்.
அவர்களை சோதனையிட்ட போது ரூ. 1 கோடி மதிப்புள்ள பிரவுன் சுகர் சிக்கியது. மேலும், அது ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அந்த மூன்று பேரின் பெயர்கள் நாமக்கல் ரவி (39), விக்னேஷ் (30), புவனேஸ்வரன் (27) என தெரிய வந்துள்ளது.
அதேபோல் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பிய பேருந்திலும் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நாமக்கல் மாவட்டம் தங்கராஜ், லோகநாதன் ஆகியோரிடம் இருந்து ரூ. 4.5 கோடி மதிப்புடைய பிரவுன் சுகரை கைப்பற்றினர்.
சேலத்தில் நடத்தப்பட்ட சோதனையில் திருச்செங்கோடு நாகராஜ், நடேசன், வெங்கடேசன், சரவணன் ஆகிய 4 பேரிடம் இருந்து ரூ. 1 கோடி மதிப்பிலான பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications