தருமபுரி மருத்துவ கல்லூரி சேர்க்கை திடீர் ரத்து-மாணவர்கள் அதிர்ச்சி!
தர்மபுரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை அரசு திடீரென நிறுத்தி வைத்துள்ளது. இதையடுத்து இந்த கல்லூரியில் சேர கட்டணம் செலுத்திய மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கடந்த 26ம் தேதி சென்னையில் கவுன்சலிங் நடத்தப்பட்டது. அதில் 84 மாணவர்களுக்கு கல்லூரியில் சேருவதற்கு அனுமதிக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இந்த கல்லூரியில் மாணவர்களை சேர்ப்பதற்கான அனுமதியை நீண்ட போராட்டத்துக்கு பிறகே இந்திய மருத்துவக் கவுன்சில் வழங்கியது. ஆனால் மத்திய அரசு நேற்று இரவு வரை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஒப்புதலைத் தொடர்ந்து, மத்திய அரசும் அனுமதி அளித்துவிடும் என்ற நம்பிக்கையில் தான் மாணவர் சேர்க்கைக்கு கவுன்சலிங் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
இப்போது மத்திய அரசு அனுமதி அளிக்காத நிலையில் எம்பிபிஎஸ் படிப்புக்கு ரூ. 10 ஆயிரத்து 495 கட்டணம் செலுத்திய 84 மாணவர்களும் அடுத்து என்ன நடக்கும் என தெரியாமல் தவித்து வருகின்றார்.
இது குறித்து முழுமையான தகவலை அளிக்க மருத்துவ கல்லூரி அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications