மகாராஷ்டிர தேர்தல்-வருணை ஒதுக்கிய பாஜக

மகாராஷ்டிர சட்டசபைக்கு வரும் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டி வருகிறது.
காங்கிரசுக்காக சோனியா, ராகுல் காந்தி ஆகியோரும், கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பாஜகவுக்காக அத்வானி சூறாவளி சுற்றுப் பயணத்தைத் துவக்கியுள்ளார். ராஜநாத் சிங், சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜேட்லி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் எதியூரப்பா, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங் ஆகியோரும் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
மேலும் சினிமா நட்சத்திரங்களான சத்ருகன் சின்ஹா, ஹேமா மாலினி, டிவி நடிகை ஸ்மிருதி இரானி மற்றும் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான நவ்ஜோத் சிங் சித்து ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
அக் கட்சியின் கூட்டணிக் கட்சியான சிவசேனா மிகத் தீவிரமாக களத்தில் சுழன்று வருகிறது.
சிவசேனாவில் இருந்து பிரிந்து போன ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தனித்துப் போட்டியிடுவது காங்கிரஸ் கூட்டணிக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு மோடியை அத்வானிக்கு அடுத்த பிரதமராக முன் நிறுத்தியதும் வருண் காந்தியின் சிறுபான்மையினர் விரோத பேச்சுமே காரணம் என்று கூறப்பட்டதையடுத்து இம்முறை மோடியை மும்பையி்ல் குஜராத்திகள் நிறைந்த பகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்ய வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
அதே நேரத்தில் வருண் காந்தியை பிரச்சாரத்துக்கே வர வேண்டாம் என்று கூறிவிட்டது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications