சிவகங்கை வெற்றியை எதிர்த்து வழக்கு - ப.சிதம்பரத்துக்கு நோட்டீஸ்
சென்னை: சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கையில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜகண்ணப்பன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சிவகங்கையில் நடந்த தேர்தலில் ப.சிதம்பரம் (காங்கிரஸ்), ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (அ.தி.மு.க.) உள்பட 20 பேர் போட்டியிட்டனர். இந்த கடுமையான போட்டியில் 3,354 ஓட்டுகள் ராஜகண்ணப்பனைவிட அதிகம் பெற்று ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் முதலில் ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து ராஜகண்ணப்பன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக கண்ணப்பன் தாக்கல் செய்த மனுவில்,
ப.சிதம்பரம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தேர்தல் அதிகாரி ஆரம்பத்தில் இருந்தே செயல்பட்டார். ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தபோது சிவகங்கை தொகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் புதிய கிளைகள் தொடங்கப்பட்டன.
இந்த கிளைகளில் பணிபுரிபவர்கள் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள். இப்படிப்பட்ட வங்கி அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுமட்டுமல்லாமல், பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ரவுண்டு முடிந்த பிறகும் வாக்குகள் பற்றி ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படவில்லை. முதலில் ராஜகண்ணப்பன் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டு, பின்னர் சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டனர்.
எனவே வாக்குகளை மீண்டும் எண்ண கோரிக்கை விடுத்தேன். ஆனால் தேர்தல் அதிகாரி அதை ஏற்கவில்லை. ஆகவே, ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை ரத்து செய்யவேண்டும். மீண்டும் வாக்குகளை எண்ண வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நேற்று நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.சரவணகுமார் ஆஜராகி வாதாடினார்.
இதையடுத்து 4 வாரத்திற்குள் பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு, ப.சிதம்பரம் மற்றும் சிவகங்கை தேர்தல் அதிகாரி உள்பட பலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications