அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வி?: அமைச்சர் மறுப்பு
சென்னை: அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படும் என்று நான் சொன்னதாக சில தமிழ் நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. அது முற்றிலும் தவறானதும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரும் 2010-2011 கல்வியாண்டிலிருந்து முதல் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் தமிழகத்தில் சமச்சீர் கல்வி தொடங்கப்படும்.
இதை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாடத் திட்டங்கள் வகுக்கும் பணியைப்பற்றி மட்டும் ஆய்வு செய்யப்பட்டது.
பாடத் திட்டம் தயாரிக்கும் பணி 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இன்று 5 அல்லது 6 நாட்களில் வரைவு பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித்துறையின் இணையத் தளத்தில் வெளியிடப்படும். வரைவு பாடத் திட்டத்தைப் பற்றிய கருத்துக்களும், ஆலோசனைகளும் வரவேற்கப்படும்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தைப் பற்றி ஒரு சில தமிழ் நாளேடுகள் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படும் என்று நான் சொன்னதாக செய்தி வெளியிட்டுள்ளன.
அப்படி வெளியிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானதும், சமச்சீர் கல்வி தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவுகளை திரித்துக் கூறுவதும் ஆகும்.
26-8-09 அன்று முதல்வர் கலைஞர் அறிவித்தபடி பயிற்று மொழியாக தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிறமொழிகளும் தொடர வேண்டும், தற்போது உள்ள அனைத்துக் கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து ஒரு பொது கல்வி வாரியத்தை உருவாக்க வேண்டும்,
வரும் கல்வியாண்டில் முதல் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் செயல்படுத்தப்படவுள்ள பொதுப் பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் தொடர்ந்து 2011-2012 ஆம் ஆண்டில் பிற வகுப்புகளுக்கும் உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்ற முடிவுகளே சமச்சீர் கல்வியைப் பொறுத்தவரை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த முடிவுகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
எனவே அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக்கல்வி என்று வெளியிடப்பட்டுள்ள செய்தியை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications