குஜராத் ரயிலில் துப்பாக்கி சூடு-வேடிக்கை பார்த்தவர் பலி
வதோதரா: வதோதராவில் சாப்பாடுக்கு பணம் கொடுப்பதில் பயணிக்கும், உணவு விடுதி ஊழியர் ஒருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது அந்த பயணி துப்பாக்கியால் சுட்டதில் இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த இன்னொரு பயணி ஒருவர் பலியானார்.
குஜராத் மாநிலத்தில் கோரக்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த அவாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து வதோதரா ரயில்வே இன்ஸ்பெக்டர் டிஜே சௌத்ரி கூறுகையில்,
ரயில் வதோதராவுக்கு முன்னதாக கோத்ரா பகுதியில் வந்து கொண்டிருந்த போது பயணி ஒருவர் சாப்பிட்ட உணவுக்கு பணம் தர மறுத்துள்ளார். இதையடுத்து உணவு விடுதி ஊழியருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கோபமடைந்த உணவு ஊழியர், அந்த பயணியை ஒங்கி அறைந்துள்ளார். இதையடுத்து அந்த பயணி துப்பாக்கியை எடுத்து சுட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.
கையில் துப்பாக்கியுடன் ஒருவர் நிற்பதை மற்ற பயணிகள் கூச்சலிட்டனர். இந்த நிலையில், கோபத்தின் உச்சத்தில் இருந்த அந்த பயணி டிரிக்கரை அழுத்திவிட்டார்.
இதை பார்த்த அந்த உணவு விடுதி ஊழியர் விலகி ஓடினார். இதனால் குண்டு இந்த சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த பைரன் பகதூர் சிங் (25) என்ற வாலிபர் மீது பாய்ந்தது.
ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
பலியான அந்த வாலிபர் உத்தர பிரதேசம் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா கிராமத்தை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications