நீதிபதி தினகரன் சொத்து விவகாரம் - தமிழகத்திடமிருந்து அறிக்கை கேட்கும் கே.ஜி.பாலகிருஷ்ணன்
சென்னை: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் சொத்து விவகாரம் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.
வருமானத்திற்கு மீறிய வகையில் பி.டி.தினகரன் பெருமளவில் சொத்துக்கள் குவித்துள்ளதாக சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது. இது ஜாதி ரீதியாக, தமிழர் ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக வருவதை தடுக்க நடைபெறும் சதி என தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பி.டி.தினகரன் உள்பட ஐந்து நீதிபதிகளின் பெயர்கள் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் இந்த சர்ச்சை கிளம்பியது.
இந்த சர்ச்சை காரணமாக தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் ஒப்புதல் தொடர்பான கோப்பை மத்திய சட்ட அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசிடமும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் அறிக்கை கோரியுள்ளாராம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.
ஏற்கனவே தலைமை நீதிபதியை நேரில் சந்தித்த பி.டி.தினகரன் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று மறுத்து விளக்கம் அளித்துள்ளார். இந்தப் பின்னணியில்தான் கே.ஜி.பாலகிருஷ்ணன் விளக்கம் கேட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதை விசாரணை என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. கிடைத்த தகவல்கள் குறித்த விளக்கமாகவே கருதப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications