பாக். ஜநா அலுவலகத்தில் குண்டு வெடித்து 5 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள ஐநா உணவு திட்ட அலுவலகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்புக்கு 5 பேர் பலியானார்கள். இதையடுத்து பாகிஸ்தான் முழுவதும் ஐநா தனது அலுவலகங்களை மூடியுள்ளது.
இன்று காலை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தி்ல் உள்ள ஐநா உணவு திட்ட அலுவலகத்துக்கு பாகிஸ்தான் ராணுவ வீரர் போல் உடையணிந்த தீவிரவாதி வந்துள்ளான்.
அவன் வெளியில் பாதுகாப்புக்கு இருந்த போலீஸாரிடம் டாய்லெட் போக வேண்டும் என கேட்டுள்ளான். இதையடு்தது காவலாளிகள் சரி ராணுவ வீரர் தானே என விட்டுவிட்டனர். உள்ளே சென்ற அந்த மனித வெடிகுண்டு தீவிரவாதி தனது உடலில் கட்டி வைத்திருந்த 8 கிலோ வெடிகுண்டை இயக்கினான்.
இதில் மனித வெடிகுண்டை தவிர்த்து 5 பேர் பலியானார்கள். அவர்களில் மூன்று பாகிஸ்தான் ஊழியர்கள், ஈராக்கை சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளனர். ஐந்தாவது நபர் யார் என்பது தெரியவில்லை. இதை தவிர்த்து மேலும் 2 ஐநா ஊழியர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஐநா செய்தி தொடர்பாளர் இஸ்ரத் ரிஸ்வி கூறுகையி்ல், பாகிஸ்தானில் இருக்கும் அனைத்து ஐநா அலுவலகங்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக காலவரையின்றி மூடப்படுகின்றன என்றார்.
இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்று கொள்ளவில்லை. என்றாலும் சமீபத்தில் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பலியான தாலிபான் தளபதி பைதுல்லா மக்சூத் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் தாலிபான் தான் இதை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த வாரம் நடந்து மூன்று வெவ்வேறு மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் சுமார் 28 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications