கோர்ட்டுடன் அரசியல் செய்யாதீர்கள் - மாயாவதிக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
டெல்லி: சுப்ரீம் கோர்ட்டுடன் அரசியல் விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனது சிலைகள், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் சிலைகள், கட்சியின் சின்னமான யானை சிலைகள் என மக்கள் வரிப்பணத்திலிருந்து ஆயிரக்கணக்கான கோடிப் பணத்தை எடுத்து வாரி இறைத்து நினைவிடங்கள், பூங்காக்கள் என கட்டி வந்தது மாயாவதி அரசு.
இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கட்டுமானப் பணிகளை அப்படியே நிறுத்த உத்தரவிட்டது. ஆனால் அதை மீறி தொடர்ந்து கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டதால் மாயாவதி அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது சுப்ரீம் கோர்ட். இதையடுத்து தற்போது கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளது மாயாவதி அரசு.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டுடன் அரசியல் விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என உ.பி. அரசைக் கேட்டுக் கொள்கிறோம். கோர்ட்டின் தடை உத்தரவையும் மீறி கட்டுமானப் பணிகள் நடந்துள்ளன.
இதற்கான உத்தரவை யார் கொடுத்தது என்று உங்களால் (உ.பி. அரசு வக்கீலைப் பார்த்து) கூற முடியுமா? டாம், டிக், ஹாரி போன்றோர் இதைப் பிறப்பித்திருக்க முடியாது. உயர் மட்டத்திலிருந்துதான் இந்த உத்தரவு வந்திருக்க வேண்டும்.
நினைவிடங்கள் தொடர்பான பணிகளை நிறுத்துவதில் அரசு அக்கறை காட்டாமல் உள்ளது. இதுதொடர்பாக அது தாக்கல் செய்த விளக்க அறிக்கை ஒரு கண்துடைப்பாகவே தெரிகிறது எனறு தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications