Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் தமிழகத்தை சீண்டும் ஜெய்ராம் ரமேஷ்!

Subscribe to Oneindia Tamil

Jairam Ramesh
டெல்லி: முல்லைப் பெரியாறு அணைக்கு அருகில் புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ள கேரள அரசுக்கு அனுமதி கொடுத்த விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு எதையும் செய்யவில்லை என்று கூறியுள்ளார் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ்.

இதன்மூலம் கேரளத்துக்கு அனுமதி தரப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளதோடு தமிழகத்துக்கு எதிரான தனது நிலையை பட்டவர்த்தனமாகக் காட்டியுள்ளார்.

தமிழகம்-கேரளம் இடையே அணை குறித்து பிரச்சனை இருக்கும் நிலையில், இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த ஆய்வுக்கு எப்படி இவர் அனுமதி அளித்தார் என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது.

இந் நிலையில் மத்திய தகவல் அலுவலகம் மூலமாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

தேசிய வனவிலங்கு வாரிய நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் நடந்தது. அதில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ள தேக்கடி (முல்லைப் பெரியாறு) அணைப் பகுதியில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972ன் கீழ் ஆய்வு நடத்த கேரள அரசு கோரிய அனுமதி வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்பட்டது.

இந்தப் பரிசீலனைக்குப் பின் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்த அனுமதிப்பது என்று முடிவு செய்தது. இந்த அனுமதி இதர சட்ட மற்றும் நிர்வாக அனுமதிகளை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் ஆய்வு நடத்துவதற்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.

ரமேஷின் இந்த விளக்கம் தமிழகத்துக்கு அவர் துரோகம் செய்துவிட்டதை ஒப்புக் கொள்வதாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரள எல்லையில் தமிழக பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டிலும் உள்ள இந்த அணையில் முழுக் கொள்ளளவுக்கு தண்ணீரைத் தேக்க விடாமல் கேரளம் தடுத்து வருகிறது. இதனால் கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் இந்த அணையை நம்பியுள்ள பாசனப் பகுதிகளில் பயிர்கள் நீரின்றி வாடுவது வழக்கமாகிவிட்டது.

விவரமான ஜெய்ராம்:

இந் நிலையில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை நடத்த கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கான ஆவணங்களின் நகல்களை தமிழகம் கோரும் என்று தெரிகிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசு சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

ஜெய்ராம் ரமேஷ் தனது உத்தரவை மத்திய தகவல் அலுவலகம் மூலமான செய்திக் குறிப்பு வழியாகத் தெரிவித்துள்ளதால் அவரது உத்தரவை ஆவணமாகக் கருத முடியாத நிலையில் தமிழகம் உள்ளது.
இதை வெறும் "செய்தியாகவே'' கருத வேண்டிய நிலையில் தமிழகம் உள்ளது. எனவே அணை கட்ட ஆய்வு நடத்த கேரளத்துக்கு அனுமதி அளித்ததற்கான ஆவணத்தை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தனது இணையதளத்திலோ அல்லது பொது மக்கள் பார்வைக்கோ வெளியிட வேண்டும்.

அனுமதி கொடுக்கப்பட்டதற்கான ஆவணங்கள் கிடைத்தால் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும்.

இதைத் தவிர்க்கவே தகவல் அலுவலகம் மூலமாக செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார் ஜெய்ராம் என்று தெரிகிறது. இது கேரளத்துக்கு ஆதரவாக தமிழகத்துக்கு அவர் செய்யும் அடுத்த அநீதியாகும். இதற்கிடேயே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக, தமிழக அரசு ஏற்கெனவே தொடர்ந்துள்ள வழக்கு மீதான விசாரணை வரும் 20ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

அப்போது, புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கேரளத்துக்கு கொடுக்கப்பட்ட அனுமதி குறித்து தமிழக அரசு விளக்கம் கோரலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+