இலங்கையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் - ருத்ரபூஜை நடத்தினார்

Subscribe to Oneindia Tamil

Ravishankar
கொழும்பு: வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கொழும்பு சென்றுள்ளார். அங்கு அவர் ருத்ரபூஜையை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த முறை ரவிசங்கர் இலங்கை சென்றிருந்தபோது, வன்னி அகதிகள் முகாமுக்குச் சென்று பார்வையிட்டார். நல உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் இந்தியா திரும்பியதும், உலகிலேயே மோசமான அகதிகள் முகாம்களாக வன்னி முகாம்கள் இருப்பதாக தெரிவித்தார். இதற்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து தனது கூற்றை மாற்றிக் கொண்ட ரவிசங்கர், இலங்கை அரசு நல்ல வசதிகளை செய்து கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் கொழும்பு சென்றுள்ளார். இது ரவிசங்கர் மேற்கொள்ளும் ஐந்தாவது இலங்கை பயணமாகும்.

கொழும்பில் நடந்த இதயங்களையும், மனங்களையும் இணைப்போம் என்ற பெயரிலான நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

இதில் புத்தமதத் துறவிகள், முஸ்லீம் அறிஞர்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள், இந்துத் துறவிகள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் நிறைவாக ருத்ரபூஜையை நடத்தினார் ரவிசங்கர். இந்த பூஜை குறித்து அவர் விளக்குகையில், இயற்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், இறைத்துவம் நிரம்பியுள்ளது.

இந்த ருத்ர பூஜையின் மூலம், இயற்கையின் அனைத்து அம்சங்களும் மதிக்கப்படுகின்றன, கெளரவிக்கப்படுகின்றன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+