போனஸ் பேச்சுவார்த்தை தோல்வி - என்எல்சி ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக்
நெய்வேலி: என்எல்சி எனப்படும் நெய்வேலி லிக்னைட் நிறுவன நிரந்தரத் தொழிலாளர்கள் போனஸ் மற்றும் ஊக்கத் தொகை தொடர்பான பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதுதொடர்பான ஸ்டிரைக் அறிவிப்பை அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாட்டாளி தொழிற்சங்கம் ஆகியவை வெளியிட்டுள்ளன.
போனஸ் மற்றும் ஊக்கத் தொகை குறித்த தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நேற்று நிரந்தரத் தொழிலாளர்கள் விதிப்படி வேலை போராட்டத்தை மேற்கொண்டனர். நேற்று காலை தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு வரை நீடித்தது. இருப்பினும் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதையடுத்து காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிலாளர்கள் அறிவித்தனர். இருப்பினும் இன்று காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது. எனவே காலையில் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி தொடங்கவில்லை. ஒரு வேளை இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையிலும் தோல்வி ஏற்பட்டால் இன்றே ஸ்டிரைக்கை தொழிலாளர்கள் மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.
நிரந்தரத் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக ஸ்டிரைக்கில் குதிப்பதால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications