காவல் நிலைய ரகளை-கைதாகும் பாமக எம்எல்ஏ
சென்னை: மணல் திருடர்களுக்கு ஆதரவாக காவல் நிலையத்தில் புகுந்து போலீஸாரிடம் வாக்குவாதம் செய்து அமளியை ஏற்படுத்திய பாமக எம்.எல்.ஏ கலிவரதனைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பில்ராம்பட்டு பஞ்சாயத்து தலைவர் ஏழுமலை, ஏரியில் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக மணல் எடுத்தபோது, அதைத் தடுத்த சரவணன் மற்றும் மூன்று பேரை அடித்ததற்காகவும், சட்டவிரோதமாக மணல் கடத்தியதற்காகவும் ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர், அரகண்டநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஏழுமலைக்கும், பா.ம.க. வை சேர்ந்த முகையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஏ.டி.கலிவரதனுக்கும் வியாபார ரீதியாக தொடர்பு இருந்து வருகிறது.
அவர், ஏழுமலையை போலீஸ் காவலில் இருந்து விடுவிப்பதற்காக நேற்று காலை சுமார் 10 மணி அளவில் காவல் நிலையத்துக்கு வந்து காவல் நிலைய அதிகாரிகளிடம் தகராறு செய்து அவரை மீட்டு செல்ல முயற்சி செய்துள்ளார்.
திருக்கோயிலூர் டி.எஸ்.பி. முத்து நல்லியப்பன், காவல் நிலையத்துக்கு விரைந்து சென்று ஏழுமலையை விடுவிப்பதை தடுத்துள்ளார்.
ஒரு மணி நேரத்துக்குப் பின் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் வெளியில் சென்றுள்ளார். இது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில், வி.ஏ.டி.கலிவரதன் மீது அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் பிரிவு 294 (பி), 353, 452, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்வதற்காக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications