செய்தி ஆசிரியர் லெனினை வலுக்கட்டாயமாக கைது செய்தனர் - தினமலர்

நடிகர் சங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் நேற்று மாலை திடீரென கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி...
சென்னை தினமலர் நாளிதழ் அலுவலகத்திற்கு, நேற்று மாலை 6.30 மணியளவில் போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் வில்வராணி முருகன், உதவி கமிஷனர் பன்னீர்செல்வம், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், உமாபதி, முத்துவேல் பாண்டியன் ஆகியோர் சாதாரண உடையில் வந்தனர். "செய்திப் பிரிவினருடன் பேச வேண்டும்' என அவர்கள் தெரிவித்தனர்.
அலுவலகத்தின் உள்ளே வந்து, வரவேற்பறையில் அமர்ந்த போலீஸ் அதிகாரிகளிடம், தினமலர் நாளிதழ் சார்பில் இராமலிங்கம் பேசினார். பின்னர் செய்தி ஆசிரியர் லெனின், போலீஸ் அதிகாரிகளிடம் பேசினார்.
பேசிக் கொண்டிருக்கும் போதே, செய்தி ஆசிரியர் லெனினிடம் போலீசார், "கடந்த 4ம் தேதி நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தி குறித்து, உங்களை விசாரிக்க வேண்டும். கமிஷனர் அலுவலகத்திற்கு வாருங்கள்' என அழைத்தனர். "விசாரணை தானே, இங்கேயே விசாரியுங்கள்' எனக் கூறினார்.
விசாரணைக்கு வந்திருந்த போலீசார் இடையிடையே யாரிடமோ மொபைல் போனில் பேசி உத்தரவுகளைப் பெற்று வந்தனர். "திடீரென உங்களை கைது செய்கிறோம்' என செய்தி ஆசிரியரைப் பார்த்து போலீசார் தெரிவித்தனர்.
செய்தி ஆசிரியர் லெனின், "என்னை கைது செய்ய வாரன்ட் இருக்கிறதா?' என கேட்டதற்கு, "உங்களை கைது செய்ய வாரன்ட் தேவையில்லை' என போலீசார் தெரிவித்தனர். "திடீரென அழைத்தால் எப்படி வர முடியும். பத்திரிகை பணி பாதியில் நிற்கிறது; ஆசிரியரிடம் பேசி விட்டு வருகிறேன்' என லெனின் தெரிவித்ததற்கு, "அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்' எனக் கூறி வலுக்கட்டாயமாக பலப்பிரயோகம் செய்து அவரை இழுத்துச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது...
இந்த நிலையி்ல் லெனின் கைது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடிகை புவனேஸ்வரி விபசார தடுப்பு பிரிவில் கைது செய்யப்பட்ட போது, கடந்த 4ம் தேதி புவனேஸ்வரி உள்ளிட்ட நடிகைகள் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாக நடிகர் சங்க பொதுச்செயலர் ராதாரவி புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் தமிழ்நாடு பெண்கள் கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4ன் கீழ் வழக்கு பதிந்து, இச்செய்தி வெளியிட்ட செய்தி ஆசிரியர் லெனின் நேற்று கைது செய்யப்பட்டார்.
முதன்மை பெருநகர எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட லெனினை, அக்டோபர் 21ம் தேதி சிறையில் அடைக்க எழும்பூர் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications