பேருந்து நிலையம்-கோவில்பட்டியில் கடையடைப்பு
கோவில்பட்டி: கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என கோரி தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
கோவில்பட்டியில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பைபாஸ் ரோடு பகுதியில் இருக்கும் புதிய பேருந்து நிலையம் வழியாக சென்னை, திருச்சி, நாகர்கோவில் உள்ளிட்ட தொலைதூரங்களில் இருந்து வரும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதனால் மதுரை, திருச்சி, நாகர்கோவில் போன்ற ஊர்களுக்கு செல்லும் மக்கள் புதிய பேருந்து நிலையத்துக்கு போக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு கூடுதல் அலைச்சல் ஏற்படுகிறது.
ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் பிரகாஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தே அனைத்து புறநகர் பேருந்துகளும், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நகர பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதன்படி கடந்த மாதம் 30ம் தேதி முதல் புறநகர் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நகர பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இதனால் பழைய பேருந்து நிலையத்திற்குள் புறநகர் பேருந்துகள் வராததால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவில்பட்டி அண்ணா பெயரை தாங்கியுள்ள பழைய பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு நடைபெற்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications