இந்திய கடற்படையின் கைதைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் மறியல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை இந்தியக் கடற்படையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்து மீன்வளத்துறையினரிடம் ஒப்படைத்ததைக் கண்டித்து நேற்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுவரை இலங்கை கடற்படையினர்தான் தமிழக மீனவர்களை தடுத்து வந்தனர். ஆனால் முதல் முறையாக நேற்று முன்தினம், இந்தியக் கடற்படை, இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி சென்று மீன் பிடித்த 22 மீனவர்களையு், அவர்களது 11 படகுகளையும் பிடித்து வந்து மீன்வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அந்த மீனவர்களுக்கு மீன் பிடிக்கச் செல்லும் அனுமதி டோக்கன் தருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையைக் கண்டித்து நேற்று காலை ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் உள்ள மீன்வளத்துறை டோக்கன் வழங்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக கிளம்பி தனுஷ்கோடி சாலையில் உள்ள தேவர் சிலை அருகே சாலை மறியலில் குதித்தனர்.
அவர்களிடம் போலீஸாரும், மீன்வளத்துறையினரும் பேச்சு நடத்தினர். பின்னர் மீனவர்கள் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications