கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்
கோவை: கோயம்புத்தூரில் கல்லூரி மாணவர்கள் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோயம்புத்தூர் கோவைப்புதூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் இது தொடர்பாக மாணவர்களுக்கும், கல்லூரி நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கல்லூரி நிர்வாகிகள் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீஸார் 6 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அன்றைய தினத்தில் விடுமுறையிலிருந்த மாணவர் சங்கமேஸ்வரன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்தும், அந்த வழக்கை வாபஸ் பெறக் கோரியும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் புகார் மனுவை அளித்தனர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், மாணவர்கள் சமாதானமடைந்து போராட்டத்தை கைவிட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications