நெல்லை இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்-கோர்ட் உத்தரவு!
கோவில்பட்டி: கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத திருநெல்வேலி இன்ஸ்பெக்டருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி ராம் அனுமன் நகரைச் சேர்ந்த கணபதி நாயக்கர் மகன் ஜெய்சங்கர் (33). இவருக்கும், ஜோதிக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நவீன் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில், தனது மனைவிடம் நகைகள் கேட்டு ஜெய்சங்கர் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது . இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் வெறுப்படைத்த ஜோதி ராம் அனுமன் நகரில் உள்ள தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி ஜோதியின் தாயார் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மேற்கு காவல் இன்ஸ்பெக்டர் ஜெபராஜ் வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கு கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஜெபராஜ் திருநெல்வேலி பாலம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜெபராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, கோவில்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி இன்ஸ்பெக்டர் ஜெபராஜுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications