திமுக- காங் மட்டும் போவது சந்தேகம் அளிக்கிறது: நெடுமாறன்
சென்னை: திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் மட்டும் இலங்கைக்கு செல்வது சந்தேகத்தை அளிப்பதாக உள்ளது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை நேரில் சென்று ஆய்வு செய்ய இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று செல்வதற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் அந்த குழுவில் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமே இடம்பெற்றிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பாராளுமன்ற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஒருவர் கூட அந்தக் குழுவில் சேர்க்கப்படாதது ஆழமான சந்தேகங்களுக்கு வழி வகுத்துள்ளது.
இலங்கையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு 3 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாகி வருவதற்கு சிங்கள அரசு மட்டுமல்ல அதனுடன் இணைந்து செயல்பட்ட இந்திய அரசும் காரணமாகும்.
இந்த நிலையில் சிங்கள அரசின் அட்டூழியங்களை மூடி மறைக்க உதவுவதற்காகவே காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்களை மட்டுமே கொண்ட குழு செல்கிறது என்ற ஐயம் வலுப்படுகிறது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அத்தனை எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் உள்ளடக்கிய குழு சென்றால் ஒழிய உண்மைகளை ஒருபோதும் கண்டறிய முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications