பிணையாளிகள் மீட்பு - பாக். ராணுவத் தலைமையக ஆக்கிரமிப்பு முடிந்தது
ராவல்பிண்டி: பாகிஸ்தான் ராணுவத் தலைமையகத்திற்குள் புகுந்திருந்த கடைசித் தீவிரவாதியையும் பாகிஸ்தான் படையினர் இன்று சுட்டுக் கொன்றனர். மேலும், அங்கு பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 39 பேரையும் அவர்கள் பத்திரமாக மீட்டனர். இதன் மூலம் ராணுவத் தலைமையகம் முழுமையாக பாதுகாப்புப் படையினரின் கைக்கு வந்துள்ளது.
ராவல் பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்திற்குள் நேற்று ராணுவ சீருடையில் புகுந்த தலிபான் தீவிரவாதிகள், சரமாரியாக சுட்டபடி ஊடுறுவினர். இதில் ராணுவத் தரப்பில் சிலர் உயிரிழந்தனர். ராணுவத்தினர் திருப்பிச் சுட்டதில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், சில தீவரவாதிகள் தலைமையகத்திற்குள் நுழைந்து சிலரைப் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.
இதையடுத்து இன்று காலை தலைமையகத்திற்குள் கமாண்டோப் படையினர் அனுப்பப்பட்டனர். அவர்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 கமாண்டோக்கள், 3 பிணைக் கைதிகள் உயிரிழந்தனர்.
ஒரு தீவிரவாதி குண்டுக் காயத்துடன் உயிருடன் பிடிபட்டான். இதன் மூலம் முற்றுகை முடிவுக்கு வந்துள்ளதாகவும், எந்தத் தீவிரவாதியும் தற்போது உள்ளே இல்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 39 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications