அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் பிருத்வி-2 வெற்றிகரமாக பரிசோதனை

நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடிய பிருத்வி-2 ஏவுகணை இன்று காலை ஒரிசா மாநிலம் சந்திப்பூர் அருகே உள்ள ஏவுகணைத் தளத்திலிருந்து ஏவி பரிசோதிக்கப்பட்டது.
காலை 10.28 மணிக்கு ஒரு ஏவுகணையும், 10.33 மணிக்கு இன்னொரு ஏவுகணையும் தனித் தனியாக ஏவப்பட்டன.
பின்னர் இதன் முடிவுகள் விரிவாக ஆராயப்பட்டன. இந்த சோதனை வெற்றிகரமாக இருந்ததாக டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சோதனையையொட்டி வங்கக் கடலில் கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
ஏற்கனவே பிருத்வி-2 ராணுவத்தில் சேர்க்கப்பட்டு விட்டது. ராணுவத்தின் சிறப்புப் பிரிவு பிருத்வி-2 ஏவுகணையைக் கையாளும் பொறுப்பில் உள்ளது.
இரட்டை என்ஜின்களைக் கொண்ட பிருத்வி-2 ஏவுகணை 9 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் அகலமும் கொண்டது.
திரவ மற்றும் திட எரிபொருளால் இயங்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமான குண்டுகள் தவிர அணு குண்டுகளையும் ஏந்திச் செல்லக் கூடிய திறமை படைத்தது பிருத்வி-2.
இன்று நடந்த சோதனையை, பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் வி.கே.சரஸ்வத், மூத்த விஞ்ஞானிகள், ராணுவ அதிகாரிகள் நேரில் பார்த்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications