முகாம் வசதிகள்: திமுக-காங் குழு பாராட்டு: இலங்கை
கொழும்பு: இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் செய்யப்பட்டுள்ள வசதிகளை தமிழகத்திலிருந்து வந்துள்ள திமுக -காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் குழு பாராட்டியுள்ளதாக இலங்கை அரசின் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்திலிருந்து வந்துள்ள பத்து பேர் கொண்ட குழுவினர் வவுனியாவில் உள்ல நலன்புரி மையங்களுக்கு விஜயம் செய்தனர்.
அதிபர் ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் இவர்கள் இலங்கை வந்துள்ளனர். இந்தக் குழுவவின் பிரதிநிதிகள், நலன்புரி மையங்களில் உள்ளோருக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளைப் பாராட்டினர்.
மேலும் இந்த மையங்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்யவும் அவர்கள் ஒத்துக் கொண்டனர்.
தங்களது ஐந்து நாள் பயணத்தின்போது இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களையும் இந்தக் குழுவினர் பார்வையிடவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்சே மீது இந்தியாவுக்கு நல்ல நம்பிக்கை...
இதற்கிடையே தமிழக குழுவினரின் விஜயம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அதிபர் ராஜபக்சே மீதான இந்தியாவின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழக குழுவினரின் வருகை அமைந்துள்ளது.
இலங்கை அரசின் உள்ளூர் மற்றும் வெளியுறவுக் கொள்கை வெளிப்படையாக உள்ளதை சர்வதேச சமுதாயம் பாராட்டி வருகிறது.
எனவே, சர்வதேச ராணுவ கோர்ட்டிலோ அல்லது விசாரணைக் குழு முன்போ இலங்கைத் தலைவர்களை நிறுத்துவதோ அல்லது போர் ஹீரோக்களை நிறுத்துவதோ இயலாத காரியமாகும்.
இதுதொடர்பான எந்த சட்ட ஒப்பந்தத்திலும் இலங்கை கையெழுத்திடவில்லை. 2002ம் ஆண்டு இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்தது. ஆனால் அப்போதைய பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே அதில் கையெழுத்திட மறுத்து விட்டார்.
ஆனால் அப்படி ஒன்று நடந்திருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரை சர்வதேச சமுதாயத்தின் முன்பு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்க முடியும்.
ஆனால் ரனில் விக்கிரமசிங்கே இப்போது கூறுகையில், ராணுவக் கோர்ட் முன்பு இலங்கைத் தலைவர்களை நிறுத்த வேண்டும் என்கிறார். இப்படிக் கூறியுள்ளதன் மூலம், நமது வீரர்களை அவர் அவமதித்து விட்டார்.
கடந்த எட்டு தேர்தல்களில் அதிபர் ராஜபக்சே தொடர்ந்து வெற்றி பெற்று வந்திருக்கிறார். இதன் மூலம் அவர் போகும் பாதை சரியானதே என்பது நிரூபணமாகியுளளது. அவரது நடவடிக்கைளை மக்கள் அங்கீகரித்து வருகின்றனர். இது தென் மாகாணத் தேர்தல் முடிவிலும் எதிரொலித்துள்ளது என்றார் பொகல்லகாமா.
ராஜபக்சேவுடன் இன்று சந்திப்பு:
இந் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் குழு இன்று இரவு ராஜபக்சேவை சந்திக்கின்றனர்.
இன்று கண்டிக்கு விஜயம் செய்த இக் குழு தோட்டத் தொழிலாளர்களான மலையகத் தமிழர்களை அவர்கள் சந்திக்கிறார்கள். பின்னர் கொழும்பு செல்லும் அவர்கள் இரவில் அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசுகின்றனர்.
அப்போது முதல்வர் அளித்துள்ள கடிதத்தையும் ராஜபக்சேவிடம் அவர்கள் ஒப்படைக்கின்றனர். தமிழர்களுக்கான நிவாரணப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கின்றனர்.
முகாம்களைப் பார்க்க கட்டுப்பாடு இல்லை..
இதற்கிடையே, தங்களது நேற்றைய பயணம் குறித்து டி.ஆர்.பாலு, பிபிசி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில்,
மேனிக் பார்மில் உள்ள 8 முகாம்களுக்கு நாங்கள் சென்றோம். அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினோம்.
முகாமில் இருப்பவர்களை தனித்தனியாகவும், குழுவாகவும் சந்தித்து பேசினோம். எங்கள் குழுவில் உள்ள 10 பேருக்குமே மக்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
மக்களை சந்திப்பதற்கு இலங்கை அரசு எங்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்க வில்லை. அங்கு செல்லக்கூடாது, இங்கு செல்லக்கூடாது என்று எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. முழு சுதந்திரம் வழங்கப்பட்டது.
முகாம் மக்களை சந்தித்து பேசியது தொடர்பாக அறிக்கை ஒன்றை தயாரித்து தமிழக முதல்வர் கருணாநிதியிடம் வழங்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications