4 மாதத்துக்கு பின் கட்சி அலுவலகம் வந்த ஜெ!

மக்களவைத் தேர்தல் படுதோல்விக்குப் பின் கொட நாடு எஸ்டேட்டுக்குப் போய்விட்ட ஜெயலலிதா, கடந்த 9ம் தேதி தான் சென்னை திரும்பினார்.
அதிமுக ஆண்டு விழாவை முன்னிட்டு கட்சி அலுவலகம் வந்த அவர் அண்ணா தொழிற்சங்க பேரவை உறுப்பினர்கள் 46 பேருக்கும், பல்வேறு சந்தர்ப்பங்களில் உயிரிழந்த 12 அதிமுக தொண்டர்களின் குடும்பத் தினருக்கும் மொத்தம் ரூ. 17.5 லட்சம் உதவித் தொகை வழங்கினார்.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிலிருந்து அதிமுக தலைமை கழகம் வரை சாலையின் இரு மருங்கிலும் கொடி, தோரணங்கள் மற்றும் வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கட்சி அலுவலகத்தில் ஏராளமான அதிமுக மகளிர் அணியினர் பூரண கும்ப மரியாதையுடன் ஜெயலலிதா வரவேற்றனர்.
ஜெ. பரிசுவழக்கு-சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் நியமனம்:
இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு எதிரான பரிசுப் பொருள் வழக்கில் ஆஜராக என்.ஆர்.இளங்கோவனை சிறப்பு வழக்கறிஞராக சிபிஐ நியமித்துள்ளது.
1992ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பிறந்த நாளின்போது ரூ. 2.89 கோடி மதிப்புள்ள டி.டிக்கள் பல நாடுகளில் இருந்தும் 57 நபர்களிடமிருந்து வந்தன. முதல்வர் என்ற முறையில் இந்த பரிசுப் பொருட்களை அரசு கஜானாவில் சேர்த்திருக்க வேண்டிய ஜெயலலிதா அதை தனது கணக்கில் போட்டுக் கொண்டார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந் நிலையில் இளங்கோவனை சிறப்பு வழக்கறிஞராக சிபிஐ நியமித்துள்ளது.
தற்போது அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக உள்ளார்.
இந்த நியமனத்தை தொடர்ந்து சிபிஐ வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஜெயலலிதாவுக்கு எதிரான பரிசுப் பொருள் வழக்கு விசாரணையில் ஆஜராகி வாதிடுவார்.
இதுதொடர்பாக என்.ஆர். இளங்கோவனுக்கு சிபிஐ அனுப்பியுள்ள தகவலில் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications