இலங்கை-அடுத்த ஏப்ரலுக்கு முன் அதிபர் தேர்தல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: விடுதலை புலிகளுக்கு எதிரான வெற்றி மகிழ்ச்சி சிங்களர்கள் மத்தியில் குறையுமுன்னர் சூட்டோடு சூடாக அதிபர் தேர்தலை நடத்த அதிபர் ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.

இது குறித்து இலங்கை செய்தி அமைச்சர் லட்சுமண் யாபா அபேவர்தனே, இலங்கை அரசின் ஒளிபரப்பு கழகத்துக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்,

இலங்கை அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரலுக்கு முன்னதாக நடத்தப்படும். தேதிகள் அடுத்த மாதம் 15ம் தேதி நடைபெறும் இலங்கை சுதந்திர கட்சி கூட்டத்தின் போது ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சேவின் பதவிக்காலம் 2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தான் முடிவடைகிறது. அதாவது இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது.

இருந்தாலும் 2 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடத்துவதற்கும் வரும் ஏப்ரலுக்கு முன் தேர்தல் நடத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக ராஜபக்சே நினைக்கிறார்.

வரும் ஏப்ரலுக்கு முன் தேர்தல் நடத்தினால் புலிகளை தோற்கடித்த காரணத்தை வைத்து கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெறலாம் என அவர் கணக்கிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+