தினமலர் விவகாரம்: பிரஸ் கவுன்சில் விசாரணைக்கு எடுத்தது!
சென்னை: தினமலர் செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா.
விபச்சாரத்தில் ஈடுபடும் நடிகைகள் என்ற தலைப்பில் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த நடிகர் நடிகைகள் சென்னை மாநகர ஆணையரிடம் புகார் கொடுத்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் தினமலர் செய்தி ஆசிரியர் பி. லெனினை, அலுவலகத்துக்குள் புகுந்து கைது செய்து இழுத்துச் சென்றனர் போலீசார். பணியிலிருந்த ஒரு செய்தி ஆசிரியர், இப்படி எல்லை மீறி கைது செய்யப்பட்டிருப்பது இந்தியாவிலேயே இதுவே முதல்முறையாகும்.
இந்த கைது விவகாரத்தை பிரஸ் கவுன்சில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இதுகுறித்து பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் செயலாளர் விபா பார்கவா விடுத்துள்ள அறிக்கை:
தினமலர் செய்தி ஆசிரியர் கைதுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. லெனினை உடனே விடுதலை செய்ய எடிட்டர் கில்டு கோரியுள்ளது' என்பது போன்ற தலைப்புகளில் கடந்த 9ம் தேதியிட்ட, முன்னணி நாளிதழ்கள் நவபாரத் டைம்ஸ், இந்துஸ்தான் டைம்ஸ்' உள்ளிட்டவற்றின் டெல்லி பதிப்புகளில் வெளிவந்த செய்திகள், இந்திய பிரஸ் கவுன்சில் கவனத்துக்கு வந்தது.
'தினமலர்' செய்தி ஆசிரியர், போலீசாரால் 7ம் தேதி கைது செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. இந்த விவகாரத்தில், பத்திரிகையின் சுதந்திர செயல்பாட்டின் மீது தாக்குதல் இருப்பதற்கு ஆரம்ப முகாந்திரங்கள் உள்ளன. பத்திரிகைகளின் சுதந்திரத்தை காக்க வேண்டியது பிரஸ் கவுன்சிலின் கடமை என்பதால், பிரஸ் கவுன்சில் விசாரணை வரையறை 1979, பிரிவு 13ன் கீழ், பிரஸ் கவுன்சில் தலைவர் இப்பிரச்னையை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார்.
இப்பிரச்னையில் உள்ள முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, வழக்கு பற்றிய விவரங்கள் கொண்ட அறிக்கையை இரண்டு வாரத்துக்குள், 'தினமலர்' அளிக்க வேண்டும். இந்த அறிக்கையின் அடிப்படையில் இப்பிரச்னையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பிரஸ் கவுன்சில் முடிவெடுக்கும் என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications