மதுரை அருகே பிரபல ரவுடி படுகொலை
மதுரை: மதுரை அருகே சமயநல்லூரில் பிரபல ரவுடி வேல்முருகன் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (29). கரிமேட்டை சேர்ந்தவர் பீமன். இவர்கள் இருவரும் ரவுடிகள். இவர்கள் மீது கரிமேடு, அவனியாபுரம் ஸ்டேஷன்களில் கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ரவுடி பீமனின் மனைவி ராமலட்சுமி. இவருக்கும், வேல்முருகனுக்கும் நெருக்கம் ஏற்பட்டது.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வழக்கில் பீமன் கைதான சம்பவத்திற்கு பிறகு ராமலட்சுமியுடன், வேல்முருகன் நெருக்கமாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதை அறிந்த பீமன் சிறையிலிருந்து வெளியே வந்ததும், வேல்முருகனை கொலை செய்ய திட்டமிட்டார்.
இது வேல்முருகனுக்குத் தெரிய வரவே, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், சமயநல்லூர் வடகரை மகாகணபதி நகரில் வாடகைக்கு குடியேறினார். தினமும் அதிகாலை மதுரைக்கு வந்து டாக்சி ஓட்டிவிட்டு, இரவு சமயநல்லூர் போய் விடுவார்.
இவர் குடிபுகுந்தது மற்றும் இவரது நடவடிக்கைகள் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கூட தெரியாத அளவிற்கு ரகசியமாக இருந்தன. நான்கு தினங்களுக்கு முன் பீமன் ஜாமீனில் வந்தார். நேற்று அதிகாலை 2 மணிக்கு வேல்முருகன் வீட்டின் பின்பக்க கதவை பீமன் தட்டினார்.
போதையில் இருந்த வேல்முருகன் கதவை திறந்த போது, அவரை பட்டாக்கத்தி மற்றும் கத்தியால் குத்தி படுகொலை செய்தார் பீமன். இதில் அவரது உடலில் 12 இடங்களில் வெட்டுக் காயம் பட்டது. இதில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications