ஸ்டாலினுக்கு வரவேற்பு-தேசிய கீதத்திற்கு அவமதிப்பு!
சமூக சேவகரும், மனித உரிமை வழக்கறிஞருமான ஜீவானந்தம் கரூர் நகராட்சி கமிஷினர் ரமணிக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ் கூறியுள்ளதாவது:
தமிழக துணை முதல்வரும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் அக்டோபர் 3ம் தேதி அன்று கரூர் வருகை தந்தபோது அவரை வரவேற்று கரூர் நகர் மன்ற துணனைத் தலைவர் கனராஜ் என்பவர் இளைஞர்களின் 'தேசிய கீதமே' வருக என்று வரவேற்பு டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார்.
இது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும். இது சட்டப்படி தவறானது ஆகும். கரூர் நகர் மன்ற துனைத் தலைவர் கனராஜ் இந்திய அரசியல் சாசனப்படி நடந்து கொள்ளவில்லை. எனவே இந்த பேனர் வைக்க நீங்கள் எப்படி அனுதி அளித்தீர்கள்.
தேசிய கீதத்தை அவமரியாதை செய்த கரூர் நகர் மன்றத் துணனைத் தலைவர் கனராஜின் பதவியை பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து கூற கரூர் நகர் மன்ற உயர் அதிகாரிகள் மறுத்து விட்டனர்.













Click it and Unblock the Notifications