மீண்டும் ஆளெடுப்பு வேலைகளில் தீவிரமாக இறங்க ஆரம்பித்துள்ளன நாட்டின் பெரிய ஐடி நிறுவனங்கள்.
இன்போஸிஸ் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்கள் நாட்டிலுள்ள பெரிய பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் எஞ்ஜினியரிங் மற்றும் நிர்வாகவியல் பட்டதாரிகளைத் தேர்வு செய்யத் துவங்கியுள்ளன.
பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஐடி நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களெடுப்பதையே தவிர்த்துவிட்டன. இன்று மெல்ல மெல்ல நிலைமை சகஜமாகத் துவங்கியிருப்பதாக தொழில் நிறுவனங்கள் கருதுகின்றன. எனவே ஆண்டு இறுதிக்குள் பெரும்பாலான நிறுவனங்கள் முழு வீச்சில் புதியவர்களை வேலைக்கு எடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இதற்கு முன்னோட்டம் கூறுவது போல, ஐடி நிறுவனங்களான இன்பேஸிஸ் மற்றும் விப்ரோ போன்றவை பொறியியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரிகளை நோக்கி மீண்டும் செல்லத் துவங்கிவிட்டன.
ஒவ்வொரு கல்லூரியிலும் திறமையான மாணவர்கள் தலா 50 பேரை தேர்வு செய்யவுள்ளன இந்த நிறுவனங்கள்.
'குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆட்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த மாத நிலவரப்படி, பெரும்பாலான நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கில் பணியாளர் தேவை. ஆளெடுப்புப் பணியில் உதவக் கோரி இன்போஸிஸ் போன்றவை எங்களை நாடியுள்ளன', என்கிறார் டிஎம்ஐ நெட்வொர்க்கின் வெங்கட் சுப்பிரமணியன்.
அக்சன்சர் போன்ற நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் புதிய ஆட்கள் நியமனத்தை நடத்தவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் முன்னணி ஐஐடி (IIT) மற்றும் ஐஐஎம் (IIM) போன்றவற்றை தொடர்ந்து பெரிய நிறுவனங்கள் அணுகி வருவதை இந்தக் கல்வி மையங்களின் நிர்வாகிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
"முன்பை விட இப்போது நிலைமை பிரகாசமாக உள்ளது. எத்தனை பேர் வேண்டும் என்று இந்த பெரிய நிறுவனங்கள் குறிப்பாகச் சொல்லவில்லை. ஆனால் மிக அதிக தேவை இருப்பது மட்டும் தெரியும்" என்கிறார் கொல்கத்தா ஐஐஎம் சேர்மன் பிரபுல்லா அக்னிஹோத்ரி.
எப்படியும் இந்த ஆண்டு மட்டுமே 25 சதவிகிதம் புதியவர்களைத் தேர்வு செய்யும் திட்டத்தில் உள்ளன பெரிய நிறுவனங்கள் என்கிறது அவுட்லுக் சர்வே.
எப்படியோ, செழிப்புக்கு திரும்பினா சந்தோஷம்!
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications