தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா?-ஓ.பி

வட சென்னை மாவட்ட அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,
கடந்த 2006ம் ஆண்டு இதே அக்டோபர் 13ம் தேதி நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுகவினர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வரம்பு மீறி செயல்பட்டதை மக்கள் அறிவர். இந்தியாவில் எங்குமே இது போன்று நடந்தது கிடையாது.
ஜெயலலிதா ஆட்சியில் போலீசார் சிறப்பாக நடத்தப்பட்டனர். அப்போது ஜாதி சண்டை, மதகலவரம் ஏற்பட்டது கிடையாது. ஆனால் திமுக ஆட்சியில் உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் போலீசார் குண்டர்கள், ரவுடிகளுடன் சேர்ந்து கேவலமாக நடத்தப்பட்டனர்.
அன்று நடந்த மாநகராட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோரினார். உயர் நீதிமன்றம் சென்றார். 99 வார்டுகளில் நடந்த தேர்தல் செல்லாது மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.
கோர்ட் உத்தரவுப்படி பிப்ரவரி மாதம் மீண்டும் நடந்த தேர்தலிலும் அதே நிலை தான் ஏற்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தல்களிலும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் கடைசி மூன்று நாட்களில் பல கோடிகளை கொட்டி ஜனநாயக படுகொலை செய்து செயற்கையாக வெற்றி பெற்றார்கள்.
இதனால் பொருளாதார சீரழிவு ஏற்பட்டது. விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கிறது.
நம் ஜீவாதார பிரச்சனைகளில் காலம் காலமாக பெற்று வந்த உரிமைகள் இன்று பறிபோய் கொண்டிருக்கிறது. காவிரிப் பிரச்சனையிலும், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையிலும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இலங்கையில் தமிழர்கள் வாழ்வுரிமை பெற்றும் அடிப்படை உரிமைகள் இல்லாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு மத்தியில் காங்கிரஸ் அரசும், மாநிலத்தில் திமுக அரசும் தான் காரணம்.
தமிழக கட்சிகளுக்கு தேர்தலில் தனியாக நிற்கும் தைரியம் உள்ளதா? எங்களுக்கு உள்ளது. அப்படி நின்றால் அதிமுக தான் வெல்லும் என்றார் பன்னீர்செல்வம்.
கூட்டத்தில் நடிகர் ராமராஜன், வட சென்னை மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோரும் பேசினர்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications